×

அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர்?.. வாரிசு அரசியல் குறித்து ராகுல் காந்தி அதிரடி பதில்

ஐஸ்வால்: அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர் என வாரிசு அரசியல் குறித்து ராகுல் காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக நேற்று மிசோரம் வந்தடைந்த ராகுல் காந்தி மக்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு, பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்; மிசோரமில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எப்போதும் இங்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்தோம். தெலுங்கானாவில் பாஜகவை தோற்கடிப்போம். மத்திய பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிப்போம். சத்தீஸ்கர் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம். கடந்த முறை ராஜஸ்தானில் பாஜகவை தோற்கடித்தோம், இந்த முறை மீண்டும் தோற்கடிப்போம். வடக்கு கிழக்கிலும் அவ்வாறே செய்ய திட்டமிட்டுள்ளோம். காங்கிரஸ் கட்சியின் கருத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். அமித்ஷாவின் மகன் என்ன செய்கிறார்? ராஜ்நாத் சிங் அவர்களின் மகன் என்ன செய்கிறார்? நான் இதை உங்களிடம் கேள்வியாய் கேட்கிறேன். நீங்கள் வாரிசு அரசியல் குறித்து பேசுகிறீர்கள்.

கடைசியாக நான் கேள்வி பட்டது அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார் என்று. எனவே கேள்விகளை சரியாக கேளுங்கள் பாஜக தலைவர்களை பார்த்து அவர்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகளை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். அவர்களின் பல குழந்தைகள் உதாரணமாக அனுராக் தாக்கூர் என அனைவரும் வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்பதை உணர்வீர்கள். இந்திய பிரதமர் ஏன் இன்று வரை மணிப்பூர் செல்லவில்லை என்று? எனக்கு இன்னமும் புரியவில்லை. என்னால் பதில் சொல்ல முடியாத புதிராக உள்ளது. அவர் நம் நாட்டின் பிரதமர். ஒரு மாநிலம் 4 மாதங்களுக்கும் மேலாக எரிகிறது.

அதன் மீது அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு என்பதை பிரதமர் உணராமல் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து மதங்களும், கலாச்சாரங்களும், வரலாறுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். நமது நாட்டின் அடித்தளத்தை அமைக்க காங்கிரஸ் உதவியது. அந்த அடித்தளத்தை பாதுகாத்து சாதனை படைத்துள்ளோம். நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது.

அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே எங்கள் பார்வை, மேலும் பாஜக-ஆர்எஸ்எஸ் பார்வை டெல்லியில் அதிகாரத்தை மையப்படுத்தி அனைத்து முடிவுகளையும் மத்திய அரசிடம் இருந்து எடுக்க வேண்டும் என்பதாகும். நாங்கள் இந்தியாவின் மதிப்புகளைப் பாதுகாப்போம். இந்திய அரசியலமைப்பை பாதுகாப்போம். இந்தியா என்ற எண்ணத்தை பாதுகாப்போம் இவ்வாறு கூறினார்.

The post அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர்?.. வாரிசு அரசியல் குறித்து ராகுல் காந்தி அதிரடி பதில் appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Rajnath Singh ,Rahul Gandhi ,AISWAL ,RAJNATH SINGH SONS ,Dinakaran ,
× RELATED 2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக...