×

2025-ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: 2025-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி 2025-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளிடம் பிதாமற் மோடி தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி;

ககன்யான் திட்டத்துக்கு முன்னோடியாக 20 வகையான முக்கிய பரிசோதனைகள் நடத்தப்படும். 3 முறை ஆளில்லாமல் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் விண்கலம், பூமிக்கு திரும்புவது குறித்த சோதனையை 21-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2035-ல் இந்தியா தனக்கான பிரத்யோக விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்க வேண்டும். நிலவுக்கு இந்திய வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த விண்கலம் உருவாக்கப்படும். சந்திராயன் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத்தின் வளர்ச்சி, புதிய ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மற்றும் வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் லேண்டர் ஆகிய கோள்களுக்கு இடையேயான பயணங்களில் பணியாற்ற வேண்டும்.

The post 2025-ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,Gaganyaan ,Gaganyaan… ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!