×

திருபட்டினத்தில் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்கள் விற்பனை கண்காட்சி

 

காரைக்கால், அக்.17: காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குதல், உற்பத்தியாளர் குழு பெயர்ப்பலகை திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.

நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன் கலந்து கொண்டு சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரி நாதர் (பொ) தலைமை தாங்கினார். விழாவில் குறைந்த வாடகையில் கிடைக்கக்கூடிய விவசாயக் கருவிகள், குழுக்களுக்கான வங்கி கடன் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கிராம சேவக்கிருஷ்ணன் செய்திருந்தார்.

The post திருபட்டினத்தில் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்கள் விற்பனை கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Self Help Groups ,Thirupattinam ,Karaikal ,Puducherry Government Rural Development Department ,Rural Livelihood Movement ,
× RELATED 27,539 புதிய சுய உதவி குழுக்கள் உருவாக்கம்: இதுவரை ₹24,926 கோடி வழங்கல்