×

நார்த்தாங்குடி அரசு பள்ளியில் விதைப்பந்துகள் வழங்கும் விழா

 

வலங்கைமான், அக்.17: வலங்கைமான் அடுத்த நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பத்தாயிரம் விதைப்பந்து வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா ராஜலெட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். அறிவியல் ஆசிரியர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விதைபந்தின் அவசியம் குறித்துமத், மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் சுகந்தி தலைமை வகித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விதைப்பந்துகளை வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்களிடம் சுற்றுச்சூழல் தொடர்பான வினாக்கள் கேட்டு, மரம் சார்ந்த நல்ல அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக பள்ளி ஆசிரியர், கிரிஜா, பூங்கொடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் நாவல்மரம், நெட்டிலிங்க மரம், வேப்பமரம், புளியமரம், தூங்குமூஞ்சி மரம் மற்றும் மயில் கொன்றை மரம் ஆகியவற்றின் விதைகளை உள்ளடக்கி விதைப்பந்து தயார் செய்யப்பட்டது.

The post நார்த்தாங்குடி அரசு பள்ளியில் விதைப்பந்துகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Northangudi Government ,School ,Valangaiman ,Northangudi Panchayat Union Middle ,Environment Forum ,
× RELATED தென்குவளவேலி அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த தின ஓவியப்போட்டி