×

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் டிவிட்டருக்கு ரூ.3.2கோடி அபராதம்

கான்பெரா: சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் டிவிட்டர் நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா இ பாதுகாப்பு ஆணையம் ரூ.3.2கோடி அபராதம் விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இ பாதுகாப்பு ஆணையமானது, சிறார் பாலியல் சுரண்டல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தின் நேரடி ஒளிபரப்பு ஆகியவற்றை எவ்வாறு கையாள்கிறீர்கள் என டிவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டது. ஆனால் 2 நிறுவனங்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில் இ பாதுகாப்பு ஆணையம், டிவிட்டர் நிறுவனத்துக்கு 3,85,000 டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கூகுள் பிராந்திய இயக்குனர் லூசிண்டா கூறுகையில்,‘‘கூகுள் நிறுவனம் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றுவதற்கும், புகாரளிப்பதற்கும் பல தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

The post சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் டிவிட்டருக்கு ரூ.3.2கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : Twitter ,Canberra ,Australian Securities and Exchange Commission ,Dinakaran ,
× RELATED நீதியை உறுதி செய்வோம் ரோஹித் வெமுலா...