×

முஷ்டாக் அலி டி20 மழையால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆட்டம் ரத்து

டேராடூன்: உள் நாட்டுத் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் நேற்று தொடங்கின. ராஞ்சியில் நடந்த சி பிரிவு ஆட்டங்களில் குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் அருணாச்சலப் பிரதேசத்தையும், ரயில்வே 9 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பூரையும் வீழ்த்தின. அதேபோல் ஜெய்பூரில் நடந்த ஏ பிரிவு ஆட்டங்களில் சட்டீஸ்கர் 44ரன் வித்தியாசத்தில் மிசோராமையும், பரோடா 19ரன் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீரையும் சாய்த்தன. பி பிரிவில் நவிமும்பை ஆட்டத்தில் சர்வீசஸ் 8விக்கெட் வித்தியாசத்தில் சிக்கிமையும் , மும்பை ஆட்டத்தில் சண்டீகர் 9விக்கெட் வித்தியாசத்தில் பீகாரையும் வென்றன. சண்டீகரில் நடைபெற்ற டி பிரிவு ஆட்டத்தில் விதர்பா 7 விக்கெட் வித்தியாசத்தில் உத்ரகண்டை ஊதித் தள்ளியது. அதே நேரத்தில் மழை காரணமாக சில ஆட்டங்கள் ரத்தாகின. அப்படி டேராடூனில் நடைபெற இருந்த தமிழ்நாடு-கர்நாடகா, மத்தியபிரதேசம்-நாகலாந்து இடையிலான ஈ பிரிவு ஆட்டங்கள் மழையால் ரத்தாகின. அதே காரணத்தால் மொஹாலியில் நடைபெற இருந்த புதுச்சேரி-ராஜஸ்தான் இடையிலான டி பிரிவு ஆட்டமும் ரத்தாகியது.

The post முஷ்டாக் அலி டி20 மழையால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆட்டம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Mushtaq Ali ,T20 ,Tamil Nadu ,Puducherry ,Dehradun ,Syed Mushtaq Ali ,Ranchi ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…