×

சில்லி பாய்ன்ட்…

* இந்தியாவில் ரொனால்டினோ
இந்தியா வந்துள்ள பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ரொனல்டினோ தனியார் கால்பந்து கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கொல்கத்தா புறநகரில் நடந்த நிகழச்சிகளில் அப்போது இளம் கால்பந்து வீரர்களுடன் விளையாடியும், அவர்களுடன் கலந்துரையாடியும் மகிழ்ந்தார்.

* ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின்(ஐஓசி) 141வது செயற்குழு கூட்டம் நடக்கிறது. அங்கு நேற்று தொடர்ந்த கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டையும் சேர்க்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதன் மூலம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்படும். அதனால் 1900ம் ஆண்டுக்கு பிறகு 128ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டும் மீண்டும் ஒரு அங்கமாக போகிறது. அது இந்தியாவுக்கு தங்கமாகும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

* டிச.2 முதல் புரோ கபடி
புரோ கபடி போட்டியின் 10வது தொடருக்கான ஏலம் கடந்த வாரம் நடந்தது. அதில் போட்டியில் பங்கேற்கும் 12 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்தன. இப்போது அணிகள் முழுமைப் பெற்று பயிற்சியை தொடங்யுள்ளன. இந்நிலையில் புரோ கபடி 10வது தொடர் டிச.2ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் போட்டி அட்டவணை வெளியாகும்.

* சிக்கலில் ரொனால்டோ
போர்ச்சுகல் கால்பந்து கேப்டன் கிறிஸ்டியனோ ரொனால்டோ இப்போது சவுதி அரேபியாவின் அல்-நஸ்ஸர் கிளப்புக்காக விளையாடி வருகிறா்ர. அவர் செப்.19ம் தேதி போட்டி ஒன்றில் பங்கேற்க பங்கேற்க ஈரான் சென்றார். அப்போது அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களில் மாற்றுத்திறனாளியான ஃபாத்திமா ஹமிமி தனது கால்களால் வரைந்த ரொனால்டோ ஓவியங்களை பரிசாக வழங்கினார். அதனால் நெகிழ்ந்த ரொனால்டோ, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஃபாத்திமாவை அன்பாக அரவணைத்தார். அந்த படம் ஊடகங்களில் வைராலானது. இந்நிலையில் சட்டத்துக்கு புறம்பாக பெண்ணை அணைத்ததால் அவருக்கு 99 கசையடிகள் வழங்க ஈரான் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து ஈரான், ‘எந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கும் ஈரான் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படவில்லை. இதுப்போன்ற தேவையற்ற பரபரப்புகள் பாலஸ்தீனத்தில் நடைபெறும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை திசை மாற்றதான் பயன்படும்’ என்று தெரிவித்துள்ளது.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Ronaldinho ,India ,Brazil ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...