×

அமெரிக்காவின் 14 ஆண்டு கனவு

மெக்சிகோவில் 14வது உலக பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அங்கு ட்லாக்ஸ்கலாநகரில் நேற்று நடந்த மகளிர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் சாரா ஹியூஸ், கெல்லி செங் இணை, பிரேசிலின் அனா பாட்ரிசியா, சன்டோஸ் லிஸ்போ இணையுடன் மோதியது. அதில் அமெரிக்க இணை 21-16, 24-22 என நேர் செட்களில் வென்றனர். அதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவின் மற்றொரு இணையான கிறிஸ்டன் நஸ், டாரின் க்ளோத் ஆகியோர் 3வது இடத்துக்கான ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் தாலிக்வா க்ளோன்சி, மரியாஃப் அர்டாச்சோ இணையை 14-21, 21-19, 15-8 என்ற செட்களில் வென்று வெண்கலத்தை கைப்பற்றியது. அமெரிக்கா 1999ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் 2பதக்கங்களையும் வென்றுள்ளது. கூடவே ஆஸி வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்கள்.
வெள்ளி வென்ற பிரேசில், தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற அமெரிக்கா வீராங்கனைகள் உற்சாகத்துடன் வெற்றி மேடையில் நிற்கின்றனர்.

The post அமெரிக்காவின் 14 ஆண்டு கனவு appeared first on Dinakaran.

Tags : America ,14th World Beach Volleyball Championship ,Mexico ,Tlaxkalanagar ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி...