×

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் 40 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

அய்ஸால்: மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் தொடங்கி விட்டது. ஆளும் மிசோரம் தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ ஆகியவை களத்தில் உள்ளன. மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. தற்போதுள்ள 4 எம்எல்ஏக்களில் 3 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளும் மிசோரம் தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் தங்கள் கட்சி சார்பில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.

அய்ஸால் கிழக்கு-1 தொகுதியில் முதல்வர் ஜோரம்தங்காவுக்கு எதிராக முதல் முறையாக லால்சங்லூரா ரால்டேவை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. அய்ஸால் மேற்கு 3 தொகுதியில் மிசோரம் மாநில காங்கிரஸ் தலைவர் லால்சவ்தா, அய்ஸால் வடக்கு 3 தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் லால் தன்சாரா போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் லால்னுன்மாவியா சுவாங்கோ அய்ஸால் வடக்கு-1 தொகுதியிலும், காங்கிரஸ் பொருளாளர் லால்மல்சவ்மா நகாகா அய்ஸால் தெற்கு-2 தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜோடின்ட்லுவாங்கா ரால்டே தனது சொந்தப் பகுதியான தோராங்கில் நிறுத்தப்படுகிறார்.

The post மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் 40 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Mizoram assembly elections ,Aizawl ,Mizoram ,northeastern ,Mizoram assembly election ,Dinakaran ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...