×

3 கோரிக்கை நிறைவேற்றம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் நன்றி

கோபி: தனது 3 கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார். கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோபி எம்எல்ஏ கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு பணியை மேற்கொண்டார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நிறைவேற்ற வேண்டிய 10 கோரிக்கைகளை வழங்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததன் அடிப்படையில் கோபி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 10 கோரிக்கைகளை வழங்கியதில், 3 கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். அதற்கு நன்றி. அதில், கோபி நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் கான்கிரீட் சாலை அமைக்க 7 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கி உள்ளது மகிழ்ச்சி. சிறிய சாலைகள் உள்ள அனைத்து இடங்களிலும் தார் சாலை அமைக்க முடியாது என்ற நிலையில், கான்கிரீட் சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கியது என்றார்.

The post 3 கோரிக்கை நிறைவேற்றம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் நன்றி appeared first on Dinakaran.

Tags : Sengottaiyan ,Chief Minister ,M.K.Stalin ,Gobi ,AIADMK ,former minister ,MLA ,KA ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...