×

இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி முஸ்லிம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்திக் கொன்ற முதியவர்: அமெரிக்காவில் பயங்கரம்

சிகாகோ: அமெரிக்கா இல்லினாய்ஸ் மாகாணத்தில் முதியவர் ஒருவர் தனது வீட்டில் குடியிருந்த 6 வயது முஸ்லிம் சிறுவன் மற்றும் அவனது தாய் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அவன் தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள பிளெயின்பீல்டு டவுன்ஷிப் பகுதியில் 71 வயது முதியவருக்கு சொந்தமான வீட்டில் பாலஸ்தீனத்திலிருந்து வந்த தாய் மற்றும் மகன் பல ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர்.

நேற்று முன் தினம் திடீரென அந்த முதியவர் திடீரென வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த 32 வயது பெண்ணையும் அவளது 6 வயது மகனையும் கத்தியால் சரமாரியாக முறை குத்தியுள்ளார். இருவரும் போட்ட அலறல் சத்தத்தால் அருகில் உள்ளவர்கள் அங்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிறுவன் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவனது தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவம் பற்றி தெரிவித்த சிகாகோவில் கவுன்டி போலீஸ் செரீப், ‘இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக முஸ்லிம் என்பதால் தாய், மகன் தாக்கப்பட்டதாகவும், சிறுவனின் உடலில் 26 கத்திக்குத்து காயங்கள் இருந்தது’ என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி முஸ்லிம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்திக் கொன்ற முதியவர்: அமெரிக்காவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,America ,Chicago ,Illinois, America ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்