×

தமிழக மீனவர்கள் கைது எதிரொலி இலங்கை அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மீனவர்கள் விசைப்படகுகளில் பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க சென்ற போது நேற்று 27 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரு நாடுகளின் கடல் பகுதியில் எல்லைகளை வகுக்கலாமே தவிர, மீன்பிடிக்க செல்கிற மீனவர்களை எல்லையை தாண்டுவதாக காரணம் கூறி இலங்கை ராணுவம் கைது செய்வது மனிதாபிமானமற்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள், கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் துன்பத்திற்கு ஆளாகி, வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் தூதரக அலுவலகத்தின் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழக மீனவர்கள் கைது எதிரொலி இலங்கை அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Congress ,Sri Lankan government ,KS Azhagiri ,Chennai ,Tamil Nadu Congress ,President ,K.S. ,Alagiri ,Nadu ,Bagjalasandi ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...