×

செயற்கைக்கோள் அனுப்புவதில் இந்தியாவை மற்ற நாடுகள் பின்பற்றுகின்றன: மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

சென்னை: பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.  இதில், மயில்சாமி அண்ணாதுரை ‘ஒவ்வொரு மனிதரும் குழந்தைதான்’ என்னும் நூலை வெளியிட்டார்.

பின்னர், அவர் பேசுகையில், ‘‘செயற்கைக்கோள் அனுப்புவதில் மற்ற நாடுகள் இந்தியாவை பின்பற்றுகின்றன. அவர்களை பார்த்து நாம் பின்பற்றுவதில்லை‌. உலகத்திலேயே அதிக ஏடிஎம் கார்டுகள் கொண்ட நாடு இந்தியாதான். அதனால் தான் கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அது பேருதவியாக இருந்தது’’ என்றார். நிகழ்ச்சியில், கல்லூரி செயலர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் பொன்னேரி பானு பிரசாத், நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீதர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post செயற்கைக்கோள் அனுப்புவதில் இந்தியாவை மற்ற நாடுகள் பின்பற்றுகின்றன: மயில்சாமி அண்ணாதுரை பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Maylaswamy Annadurai ,CHENNAI ,Ponneri ,ISRO ,Mailaswamy Annadurai ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...