×

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் இருந்து பயணியர் விமான சேவையை தொடங்கியது அலையன்ஸ் ஏர்லைன்ஸ்..!!

சேலம்: இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் இருந்து பயணியர் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உடான் திட்டம் மூலம் சேலம் மாவட்டம் ஓமனூர் அடுத்த காமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு ப்ளூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சேவையை தொடங்கியுள்ளது.

அதன்படி பெங்களூரு, சேலம், கொச்சி வழித்தடத்திலும், அதேபோல் கொச்சி, சேலம், பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன் மற்றும் வெள்ளி கிழமைகளை தவிர்த்து மற்ற 5 நாட்கள் விமானம் இயக்கப்படுகிறது. விமான சேவையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணியும் கலந்து கொண்டார். வரும் 29ம் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்குகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் சேலத்தில் இருந்து பயணியர் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் இருந்து பயணியர் விமான சேவையை தொடங்கியது அலையன்ஸ் ஏர்லைன்ஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Alliance Airlines ,Salem ,Union Government ,UDAN ,Dinakaran ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின