×

திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்


கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் அஜய் ராமதாஸ் ஏற்பாட்டில், வேல்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து, கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். திமுக மருத்துவர் அணி மாநில செயலாளர் டாக்டர் எழிலன் எம்எல்ஏ, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வில்சன், தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக் முன்னிலை வகித்தனர்.

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் வேல்ஸ் மருத்துவமனையில் இருந்து 20க்கும் மேற்பட்ட மருத்துவர் குழுவினர் பங்கேற்று, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கல்லீரல் பரிசோதனை, கண் தொடர்பான கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் அழுத்தம் போன்றவற்றுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

The post திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : DIMUKA DOCTOR TEAM ,Kummidipundi ,Thiruvallur East District ,Kummidipundi Block Dimuka Doctor Team ,Ajay Ramadas ,Wales Hospital ,Dhimuka Doctor ,Dinakaraan ,
× RELATED தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்...