×

சென்னையில் ஓலா, உபர் ஓட்டுநர்கள் 3 நாட்கள் போராட்டம்: கமிஷன் தொகை குறைப்புக்கு எதிராக ஓட்டுநர்கள் கொந்தளிப்பு

சென்னை: சென்னையில் ஓலா, உபர் வாடகை கார் ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செயலியை நீக்கி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் அதிக கமிஷன் பெற்று கொண்டு தங்களுக்கு குறைவான கமிஷன் வழங்குவதாக ஓட்டுநர்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனவே வாடகை வாகனங்களை முறைப்படுத்த வழிகாட்டுதல் விதிமுறைகளை அரசு விரைவில் வெளியிட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் ஓலா, உபர் போன்ற செயலி அரசு ஏற்க வேண்டும். வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 3 நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டுநர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி சென்னை சின்னமலையின் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலக முன்பு ஓலா, உபர் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்சி, மதுரை, கோவையில் நாளை போராட்டம் தொடங்கவுள்ள நிலையில் நாளை மறுதினம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தில் 12 சங்கங்கள் மற்றும் சங்கங்களை சாரதா ஓட்டுநர்கள் பங்கேற்றுள்ளனர். எனவே தமிழ்நாடு முழுவதும் இந்த செயல்களை மையப்படுத்தி இயங்கும் 1,20,000 வாகனங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் ஓலா, உபர் ஓட்டுநர்கள் 3 நாட்கள் போராட்டம்: கமிஷன் தொகை குறைப்புக்கு எதிராக ஓட்டுநர்கள் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ola ,Uber ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...