×

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனை வாரியம் அமைத்து 2022 ஜூனில் அரசாணை வெளியிடப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் உரிமை தொடர்பாக கொள்கைகள் வகுப்பது, அரசுக்கு பரிந்துரை வழங்க குழு அமைத்த நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது . ரூ.1,763 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவது  குறித்தும் சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது . இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது,

மாற்றுத்திறனாளிகள் நலன் பேணும் அரசு

மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது. அனைத்து உயிர்களும் ஒன்று, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

பின்னடைவு பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டில் பின்னடைவு காலிப்பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச, கட்டாய கல்வி வழங்க 22 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சிறப்பு பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 மடங்காக உயர்வு. மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தலைவி பெண்களுக்கு ரூ.1,000 -மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினா, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தடையின்றி மாற்றுத்திறனாளிகள் அணுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடையக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம். தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை.

மனநலம் பாதித்தவர்களுக்காக மீண்டும் இல்லம்திட்டம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக மீண்டும் இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

The post மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammed ,State Advisory Board for Alternative Competencies ,Stalin ,Chennai ,General Secretariat ,State Advisory Board for Alternative Qualifiers ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...