×

தேமுதிக ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு: நாமக்கல் வடக்கு மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியின் தேமுதிக துணை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் பங்கேற்று, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் பேசினார். கூட்டத்தில் துணை செயலாளர்கள் ராசிபுரம் தொகுதி பாலச்சந்தர், திருச்செங்கோடு சக்திவேல், குமாரபாளையம் பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

The post தேமுதிக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Democratic Consultative Meeting ,Tiruchengode ,Namakkal North District ,Kumarapalayam ,Rasipuram ,Assembly Constituency ,DMUDI ,Secretaries' ,DEMUDIC ,Dinakaran ,
× RELATED வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம்