×

மாவட்ட தடகள போட்டிகள் பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் சாதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில், 1450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆதவன், 14 வயதிற்குட்பட்ட குண்டு எறிதல் போட்டியில் முதலிடம், 200 மீ ஓட்டத்தில் 2ம் இடம் பிடித்தார். மோனிஷ் தட்டு எறிதலில் 3மிடம் பிடித்தார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆதவன், தேவேஷ், நவீன்குமார், ரவிச்சந்திரன் 2ம் இடம் பிடித்தனர். 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சவுந்தர்ராஜன் முதலிடம் பிடித்தார். மும்முறை தாண்டுதல் போட்டியில் மாணவர் நாத் 2ம் இடம், நவீன்குமார் 3ம் இடம், கோல் ஊன்றி தாண்டுதல் போட்டியில் நரேஷ் 2ம் இடம் பிடித்தனர். இதேபோல், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தருண், சஞ்சய், பிரித்திவிராஜ், சுஜித் 3ம் இடம் பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் குமார், ராகவி, முருகானந்தம், ராமசுந்தரி, ரத்னா ஆகியோரையும், தாளாளர் கூத்தரசன், பள்ளி முதல்வர் மெரினாபலராமன், தலைமை ஆசிரியர்கள் ஜெலஜாக்ஷி, குலசேகரபாண்டியன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

The post மாவட்ட தடகள போட்டிகள் பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : District Athletics Competitions ,Parkur Velankanni School ,Krishnagiri ,Parkur Velankanni Matric High School ,Achievement ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது...