×

தமிழ்நாடு-கர்நாடகா இன்று பலப்பரீட்சை

டேராடூன்: உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் போட்டி இன்று முதல் நாடு முழுவதும் 7 நகரங்களில் நடைபெற உள்ளது. நவ.6ம் தேதி வரை நடைபெற உள்ள தொடருக்கான ஆட்டங்கள் ராஞ்சி, ஜெய்பூர், மும்பை, நவிமும்பை, டேராடூன், மொஹாலி, சண்டீகர் என 7 நகரங்களில் நடக்கும். இந்த ஆட்டங்கள் காலை 9.00, முற்பகல் 11.00, நண்பகல் 1.30 , மாலை 4.30 மணிகளுக்கு தொடங்கும். அதிக முறை சாம்பியன் தமிழ்நாடு, நடப்பு சாம்பியன் மும்பை, சர்வீசஸ், ரயில்வே என மொத்தம் 38 அணிகள் களம் காண உள்ளன. இவை மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏ, பி, சி பிரிவுகளில் தலா 8 அணிகள் டி, ஈ பிரிவுகளில் தலா 7 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழ்நாடு ஈ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் கர்நாடக அணியை இன்று எதிர்கொள்கிறது. தமிழ்நாடு விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் டேராடூனில் மட்டும் நடக்கும். வாய்ப்பில்லை வெளிமாநில வீரர்கள் 3 பேர் கட்டாயம் தமிழ்நாடு அணியில் இடம் பெற வேண்டி உள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த ரகுபதி சிலம்பரசன், பாபா இந்திரஜித், பொய்யாமொழி, மணிமாறன் சித்தார்த், பெரியசாமி, சரவணகுமார் என திறமையான வீரர்கள் பலருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

புதுச்சேரி அணியில் ரோகித் தலைமையிலான 15பேர் கொண்ட அணியில் 9 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வாய்ப்பில்லாமல் இருக்கும் தமிழக வீரர்களுக்கு புதுச்சேரி அணியில் வாய்ப்பு தருவதேயில்லை. தமிழக அணி: வாஷங்டன் சுந்தர்(கேப்டன்), சாய் சுதர்சன், செழியன் ஹரிநிஷாந்த், பாபாஅபரஜித், ஷாருக்கான், விஜய் சங்கர், அஜிதேஷ் குருசுவாமி, நாராயண் ஜெகதீசன், வருண் சக்ரவர்த்தி, எம்.முகமது. ரவி சாய்கிஷோர், தங்கராசு நடராஜன், குல்தீப் சென்(மத்திய பிரதேசம்), சந்தீப் வாரியர்(கேரளா), சஞ்ஜெய் யாதவ்(உத்தரபிரதேசம்).

The post தமிழ்நாடு-கர்நாடகா இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,Dehradun ,Domestic ,T20 ,Syed Mushtaq Ali ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...