×

2 மாதம் சென்றாலே பொதுத்தேர்வு எழுத அனுமதி ராஜஸ்தானில் நீட், ஜெ.இ.இ பயிற்சி பெறும் பீகார் டம்மி பள்ளி மாணவர்கள்: போட்டித் தேர்வுகளால் சீரழியும் கல்வி முறை

புதுடெல்லி: வட மாநிலங்களின் மாணவர்கள் நுழைவு தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த டம்மி பள்ளியை தேர்வு செய்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானின், கோட்டா நகரில் ஜெ.இ.இ மற்றும் நீட் தேர்வுக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இந்த நுழைவு தேர்வு மையங்களில் பயிலும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பள்ளிகளில் பயின்று கொண்டே கோட்டாவில் தங்கி அங்குள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து நுழைவு தேர்வுக்கு தயாராகின்றனர்.பீகாரை சேர்ந்த ரித்திமா என்ற மாணவி கயாவில் உள்ள டம்மி பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். பீகார் பள்ளியில் படித்து கொண்டே கோட்டாவில் ஜெ.இ.இ நுழைவு தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதே போல் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் ரூர்க்கியை சேர்ந்த ஹர்ஷவர்தன் கூறுகையில்,‘‘ பள்ளிக்கு தினமும் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல் பள்ளியில் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ளாவிட்டாலும் பிரச்னை இல்லை. பொதுத்தேர்வுக்கு முன் 2 மாதம் பள்ளிக்கு சென்றால்போதும். அப்போது எங்களுக்கு பாடம் நடத்துவார்கள். அத்தோடு பொதுத்தேர்வில் பங்கேற்கவும் அனுமதி தருவார்கள்’’ என்றார். இதே போல் டம்மி பள்ளியில் சேர்ந்த பல மாணவர்கள் பயிற்சி மையங்களில் தங்கி படிக்கின்றனர். டம்மி பள்ளியில் சேருவதற்கான கட்டணம் வருடத்துக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை என கோட்டாவில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.கோட்டாவில் மன அழுத்த பிரச்னையால், இந்த ஆண்டு 23 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது போல் டம்மி பள்ளியில் மாணவர்களுக்கு பின்னாளில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என கல்வி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

The post 2 மாதம் சென்றாலே பொதுத்தேர்வு எழுத அனுமதி ராஜஸ்தானில் நீட், ஜெ.இ.இ பயிற்சி பெறும் பீகார் டம்மி பள்ளி மாணவர்கள்: போட்டித் தேர்வுகளால் சீரழியும் கல்வி முறை appeared first on Dinakaran.

Tags : Rajasthan, Neet ,J. ,E. Bihar ,NEW DELHI ,Rajasthan Neet, ,J. E. Bihar Dummy School ,Dinakaraan ,
× RELATED யூடியூபர் VJ சித்துக்கு எதிராக போலீசில் புகார்!