×

மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: முதல்வர் சோரம் தங்கா நம்பிக்கை

அய்ஸ்வால்: மிசோரமில் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் சோரம் தங்கா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மிசோரமில் சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணியின் பதவிக் காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சோரம் தங்கா, “நடைபெறவுள்ள பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். 35 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்.

காங்கிரஸ் கட்சி 1 அல்லது 2 இரண்டு இடங்களில் வெற்றி பெற்றால் அதுவே அவர்களுக்கு அதிர்ஷ்டம். அல்லது அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. பாஜவின் நிலையும் இதேதான். ஜோரம் மக்கள் கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தாலே பெரிய விஷயம். மீண்டும் ஆட்சி அமைக்க மிசோ தேசிய முன்னணிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்று இவ்வாறு தெரிவித்தார்.

 

The post மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: முதல்வர் சோரம் தங்கா நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Mizo National Front ,CM ,Soram Thanga ,Chief Minister ,Mizoram ,Mizoram… ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு