×

மிசோரம் ஆளுங்கட்சி புதிய கூட்டணி

ஐஸ்வால்: 40 சட்டபேரவை தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் வரும் நவம்பர் 7ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி மற்றும் எச்.பி.சி கட்சியிலிருந்து பிரிந்த ஹமர் மக்கள் பேரவை (ஆர்) ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில், மிசோ தேசிய முன்னணி பொதுசெயலாளர் லால்முவாந்தங்கா பவாய் மற்றும் எச்.பி.சி (ஆர்) கட்சி பொதுச்செயலாளர் எச்.டி.வுங்கா இடையே கூட்டணி குறித்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, இரு கட்சிகளும் தங்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும். மிசோ தேசிய முன்னணி வென்றால், ஹமர் மக்களின் மறுகுடியேற்றம், வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எச்.பி.சி கட்சி ரோரிங்கா தலைமையில் பிரிந்து எச்.பி.சி (ஆர்) என்ற பெயரில் புதிய கூட்டணி வைத்து களம் காண்கிறது.

The post மிசோரம் ஆளுங்கட்சி புதிய கூட்டணி appeared first on Dinakaran.

Tags : Mizoram ruling party ,Aizawl ,Mizoram ,Mizo ,Mizoram ruling ,Dinakaran ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...