×

மழைநீர் வடிகால் பணி துவக்கம்

பவானி, அக்.15: பவானி ஊராட்சி ஒன்றியம், வரதநல்லூர் ஊராட்சி, சின்னபெரிச்சிபாளையம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய பொதுநிதியில் மேற்கொள்ளப்படும் இப்பணியை ஒன்றிய கவுன்சிலர் பி.சதீஷ்குமார், பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர்கள் சகுந்தலா கருப்புசாமி, வினோத்குமார், திமுக நிர்வாகிகள் முனிராஜ், சத்தியமூர்த்தி, கைலாசமூர்த்தி, உள்ளூர் பிரமுகர்கள் நடராஜ், வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மழைநீர் வடிகால் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Bhavani Panchayat Union ,Varadanallur ,Panchayat ,Chinnaperichipalayam ,Dinakaran ,
× RELATED ரதசப்தமி பிரமோற்சவம் நிறைவு...