×

பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்டதால் அதிமுக மாஜி எம்எல்ஏ மீது வழக்கு ரத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் கடந்த 19ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான குமரகுரு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்ததை தொடர்ந்து பொதுக்கூட்டத்தை கூட்டி மக்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைதொடர்ந்து கடந்த 9ம் தேதி கள்ளக்குறிச்சி மந்தைவெளி அண்ணா திடலில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், குமரகுரு பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். அதனை தொடர்ந்து இவ்வழக்கை ரத்து செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்ததன் பேரில் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர்.

The post பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்டதால் அதிமுக மாஜி எம்எல்ஏ மீது வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Kallakurichi ,AIADMK ,Kallakurichi Manthaivela Thidal ,MLA ,Ulundurpet district ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்