×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளின் நிலை குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளின் நிலை குறித்தும், சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தலைமை செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, முதன்மைச் செயலாளர். நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. மேலாண்மை இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், உறுப்பினர் செயலாளர், பெருநகர வளர்ச்சிக் குழுமம், நிர்வாக இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், இயக்குநர், பேரிடர் மேலாண்மை, செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இணை மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (பணிகள்), கூடுதல் மாநகர காவல் ஆணையர் (போக்குவரத்து) மற்றும் வட்டார துணை ஆணையர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, நான்காவது ஆய்வுக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலைப்பணிகள் குறித்தும் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், போக்குவரத்து காவல்துறையிடம் சோழிங்கநல்லூர், மணப்பாக்கம் கொளப்பாக்கம் ஆகிய மேடவாக்கம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி இதுவரை 96 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதென்றும் மீதமுள்ள பணிகள் 20.10.2023-க்குள் முடிக்கப்படும் என தெரிவித்தார். பணிகள் 20.10.2023-க்குள் தலைமைச் செயலாளர் மண்டலம்-4 முதல் மண்டலம்-13 வரை உள்ள 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை 20.10.2023-க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார். கொசஸ்தலையாறு வடிநில பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளில் 8 இடங்களில் இணைப்பு செய்ய வேண்டிய மழைநீர் வடிகால் பணிகளை 20.10.2023-க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

இணை ஆணையர் (பணிகள்), பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் கோவலம் வடிநில பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளில் 20 இடங்களில் இணைப்பு செய்ய வேண்டிய மழைநீர் வடிகால் பணிகளில் 17 இடங்களில் மின் கம்பங்கள் அகற்றி பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார்கள். தலைமைச் செயலாளர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இந்த 17 இடங்களை கள ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்குள் மின் கம்பங்களை அகற்றித்தருமாறும், பெருநகர சென்னை மாநகராட்சி இந்த 17 இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகளை 20.10.2023-க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். மேலும், மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் Silt Catch Pit அமைக்கும் பணி. construction debri அகற்றும் பணி. சாலை வெட்டு சீரமைக்கும் பணிகளை 20.10.2023க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

நீர்வள ஆதார துறை, அனை ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். மேடவாக்கம் பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் நான்கு இடங்களில் மழைநீர் அகற்ற தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தினார். கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வள துறை அவர்கள் 9 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் shutter அமைக்கும் பணிகளில் 4 இடங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தலைமைச் செயலாளர் அவர்கள் மீதமுள்ள 5
இடங்களில் shutter அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைகள் துறை. ஈ.வெ.ரா பெரியார் சாலை, அண்ணா சாலை, டைடல் பார்க் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் விபத்து ஏற்படாத வண்ணம் இருக்க சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் அமைத்துள்ள தடுப்பரன் (barricading) போன்று அமைக்குமாறு அறிவுறுத்தினார். மழைநீர் வடிகால்களில் மழைநீர் செல்ல போதிய inlet அமைக்குமாறு அறிவுறுத்தினார். நடைபாதைகளில் kerb-னை இடைவெளி இல்லாமல் சீராக அமைக்குமாறு அறிவுறுத்தினார்.

இணை ஆணையர் (பணிகள்), பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் 07.10.2023 அன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கேற்ப சாலைவெட்டு சீரமைக்கும் பணிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் அவர்களுக்கு விவரித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் கே.கே.நகர் அண்ணா பிரதான சாலை, நெடுஞ்செழியன் சாலை, பாடசாலை. மணலி சின்னசேக்காடு. மாதவரம், முகலிவாக்கம், வளசரவாக்கம், இராமாபுரம், மணப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் பணிகள் முடிக்கப்பட்ட சாலைகளில் நிரந்தர சாலை வெட்டு சீரமைப்பு பணிகள், தற்காலிக சாலை வெட்டு சீரமைப்புப்பணிகளையும் அனைத்தும் 20.10.2023-க்குள் முடிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத்துறை, அண்ணா சாலை. ஜி.எஸ்.டி சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, 100 அடி சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, வேளச்சேரி- தாம்பரம் சாலை, மர்மலாங் பாலம் இரும்புலியர் சாலை, வளசரவாக்கம் வள்ளுவர் நகர் சாலை, எருக்கஞ்சேரி சாலை, மேடவாக்கம் மாம்பாக்கம் சாலை, வானகரம் அம்பத்தூர் புழல் சாலை ஆகிய சாலைகளில் மேற்கொண்டு வரும் சாலை வெட்டு மற்றும் சீரமைப்புப்பணிகளை 20.10.2023-க்குள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

தாம்பரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ராதா நகர் சுரங்க பாதை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் 20.10.2023க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் கிளாம்பாக்கம் பேருந்து வடிகால் பணிகளையும் 20.10.2023க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். நிலையம் அருகில் ஜி.எஸ்.டி சாலை மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி 50 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

இறுதியாக வடகிழக்கு 23.10.2023-25.10.2023 பருவமழை துவங்குவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதாகவும், அதன் பொருட்டு நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் தற்காலிகமாக முடித்துக் கொள்ள வேண்டும். புதிய சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினார். மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும். Silt catch pitகளில் மண், கான்கிரீட் கலவைகள் மற்றும் தார் கலவைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக அகற்றப்பட வேண்டும். சுரங்கப்பாதைகளில் மோட்டார் பம்புகள் அனைத்தும் சரியாக இயங்குவதை உறுதிபடுத்த வேண்டும். மேலும், தண்ணீர் தேங்கியுள்ள அளவுகோல் நுழைவுகளிலேயே பொறுத்தப்பட வேண்டும். மரக்கிளைகள் கழிக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளின் சாலை வெட்டுக்கள் உடனடியாக சீர்செய்யப்பட்டு வாகனங்கள் சிரமமின்றி விபத்தில்லாமல் பயணிக்க உறுதி செய்யப்பட வேண்டும்என்றும் அறிவுறுத்தினார்

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளின் நிலை குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaraan ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...