×

இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் உயிரிழப்பு.. லெபனானில் பணியாற்றி வந்த ஊடகவியலாளர் பலி..!!

காசா: இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியதை அடுத்து காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – காசா அமைப்பினர் இடையேயான போர் 8-வது நாளாக தொடர்கிறது. முன்னதாக 24 மணிநேரத்தில் தெற்கு நகரங்களுக்கு இடம் பெயருமாறு வடக்கு காசா பகுதி மக்களுக்கு நேற்று எச்சரிக்கை விடப்பட்டது. கேடு இன்று காலையுடன் முடிவடைந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கியது. அதேபோல் வான்வழியாகவும் காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதல் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் 324 பேர் உயிரிழந்தனர். 1,000 பேர் காயமடைந்தனர். எனவே காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 குழந்தைகள் உட்பட 2,215-ஆக அதிகரித்துள்ளது. தாக்குதல் தொடர்வதால் காசாவில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். தரைமட்டமான கட்டிடங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தெற்கு லெபனானில் பணியாற்றி வந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் இஸ்லாம் அப்துல்லா குண்டுவீச்சில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊடகவியலாளர் உயிரிழப்புக்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேலின் சேனல் 13 செய்தி நிறுவனத்தின் குழுவினர் தங்கியுள்ள முகாம் அருகே காசா வீசிய ஏவுகணை விழுந்து வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் 1300-க்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ள நிலையில் 8,714 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் உயிரிழப்பு.. லெபனானில் பணியாற்றி வந்த ஊடகவியலாளர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Gaza ,Lebanon ,Israeli army ,Hamas ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...