×

நாடு முழுவதும் தொழில்துறையில் பெண்களின் பங்கேற்பு 37% ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் கடந்த 9ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 2023ம் ஆண்டில் நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.2 சதவீத அளவுக்கு மேம்பட்டு 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக, இந்த விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம், 2018-19ம் ஆண்டில் 24.5 சதவீதமாகவும், 2019-20ம் ஆண்டில் 30 சதவீதமாகவும், 2020-21ம் ஆண்டில் 32.5 சதவீதமாகவும், 2021-22ம் ஆண்டில் 32.8 சதவீதமாகவும், 2022-23ம் ஆண்டில் 37 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் தொழில்துறையில் பெண்களின் பங்கேற்பு 37% ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Ministry of Women and Children Development of the Union Government ,Union Government Statistics ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...