×

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை : பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இலங்கை உட்பட பல நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக தொன்று தொற்றே கப்பல் போக்குவரத்து இருந்ததாக குறிப்பிட்டார். பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும் பாரதியார் பாடல்களையும் அவர் மேற்கோள்காட்டினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு,” சங்ககால தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் குறித்த வரலாறு இடம்பெற்றுள்ளது.இந்தியா, இலங்கை படகு மற்றும் கப்பல் போக்குவரத்து இருந்ததை சங்ககால இலக்கியங்களான பட்டினப் பாலை , மணிமேகலை ஆகியவற்றில் குறிப்பிடத்தப்பட்டுள்ளது.மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் சிந்து நதி மீசை பாடல், இரு நாடுகள் இடையிலன அழகு உறவை எடுத்துக் கூறியுள்ளது,”என்றார்.

மேலும் பேசிய அவர்,” இந்தியா – இலங்கை இடையேயான ராஜதந்திர பொருளாதார உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நாகை – காங்கேசன் துறைமுகம் இடையே படகு சேவை தொடங்கப்பட்டது இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல். இந்தியா இலங்கையில் அமல்படுத்தும் திட்டங்கள் அந்த மக்களை வளர்ச்சியடைய செய்து வருகிறது.இந்த கப்பல் சேவை (நாகை-காங்கேசன் துறைமுகம் கப்பல் சேவை) தொடங்குவதற்காக இலங்கை அதிபர், மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதன்பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையுடன் சேர்ந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. நன்றி,”எனத் தெரிவித்தார்.

The post ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை : பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rameswarat ,Sri Lanka ,Delhi ,Dinakaraan ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...