×

நீர் இல்லை… நிழலும் இல்லை.. பாலைவனத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மரணிக்கும் மக்கள்.. 148 பேர் எறும்புகளுக்கு இறையாகும் சோகம்!!

வாஷிங்டன் : பிழைப்பு தேடி மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர் மக்கள் டெக்சாஸில் உள்ள கொடிய பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காமல் மரணம் அடைவது காண்போரை கண்கலங்க வைக்கிறது. வடக்கு அமெரிக்க நாடுகளில் நிலவும் கொடிய வறுமை காரணமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மெக்சிகோ வழியாக டெக்சாஸ் மாகாணத்தில் நுழைவதற்காக அங்குள்ள நியூ மெக்சிகோ மண்டலத்தின் சிச்சுவஹான் பாலைவனத்தை புலம்பெயர்வோர் கால்நடையாக கடக்கின்றனர். ஆனால் அந்த பாலைவனத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பலர் மயக்கம் அடைந்து கீழே சரிந்து இறக்கின்றனர்.

குடிக்க தண்ணீர் இல்லை, வெயிலுக்கு ஒதுங்க நிழல் கூட இல்லை, பிழைப்பிற்காக பாலைவனத்தை கடந்தவர்களில் கடந்த சில நாட்களில் 60 பேர் எறும்புகளுக்கு இறையாகிவிட்டனர். கடந்த ஓர் ஆண்டில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் 148 பேர் பாலைவனத்தில் நாதியற்றவர்களாக விழுந்து பரிதாப மரணத்தை தழுவியுள்ளனர். எனவே சட்ட விரோதமாக உயிரை பணையம் வைத்து அமெரிக்காவிற்குள் நுழைவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

The post நீர் இல்லை… நிழலும் இல்லை.. பாலைவனத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மரணிக்கும் மக்கள்.. 148 பேர் எறும்புகளுக்கு இறையாகும் சோகம்!! appeared first on Dinakaran.

Tags : Washington ,United States ,Mexico ,Texas ,
× RELATED அமெரிக்காவில் போராட்டத்தை...