×

நாமக்கல் அருகே 7 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த 13 கோயில்கள் வட்டாட்சியர், ஆய்வாளர் முன்னிலையில் மீண்டும் திறப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் அருகே மூன்று சமூதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த 13 கோயில்கள் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள தும்மங்குறிச்சி அடுத்த மேலப்பட்டி மேல்முகம் என்ற கிராமத்தில் இரு வேறு சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோயில் உட்பட 4 கோயில்கள் உள்ளன. மேலும், அதே பகுதியில் மற்றோரு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் கோயில், நல்லேந்திரன் கோயில் உள்பட 9 கோயிகள் உள்ளன.

மூன்று சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு இடையே வழிபாடு மற்றும் திருவிழா நடத்துவது பிணக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 13 கோயில்களையும் பூட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து கோயில்களை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வட்டாட்சியர் சக்திவேல், காவல் ஆய்வாளர் சுமதி ஆகியோர் முன்னிலையில் கோயில்களின் சீல் அகற்றப்பட்டன. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

The post நாமக்கல் அருகே 7 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த 13 கோயில்கள் வட்டாட்சியர், ஆய்வாளர் முன்னிலையில் மீண்டும் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Revenue Department ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...