×

பரமக்குடி அரசு கல்லூரியில் தகவல் அறியும் சட்ட விழிப்புணர்வு போட்டி

பரமக்குடி,அக்.14: பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பாக அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 விழிப்புணர்வு போட்டிகளை நடத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 நடை ஓட்டம் மற்றும் கயிறு இழுத்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கட்டுரைப் போட்டிகள் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

விழிப்புணர்வு போட்டிகளை முதல்வர்(பொ) முனைவர் கணேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கண்ணன், விஜயகுமார், வரலாற்று துறை பேராசிரியர் கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரசாத் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டன.

The post பரமக்குடி அரசு கல்லூரியில் தகவல் அறியும் சட்ட விழிப்புணர்வு போட்டி appeared first on Dinakaran.

Tags : Paramakkudy Govt College ,Information Awareness Legal Awareness Competition ,Paramakudi ,Paramakudi Government Arts College ,Tamil Nadu Government ,Higher Education Department ,Paramakkudy Government College ,Law Awareness Competition ,Dinakaran ,
× RELATED பரமக்குடியில் முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா