×

கட்டாரிமங்கலம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமான கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மாலை 4 மணிமுதல் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை. சிறப்பு பூஜை நடந்தது.இதனையடுத்து நந்தியம்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 5 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் வி.நடராஜபிள்ளை தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post கட்டாரிமங்கலம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Katarimangalam Shiva temple ,Satankulam ,Katarimangalam ,Sivakami Ambal Sametha Ajayakoothar temple ,Nataraja ,
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது