×

இன்று உலக தர நிர்ணய நாள் போலி ஐ.எஸ்.ஐ. முத்திரை பயன்பாட்டை தடுக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தல்

திருவாரூர்: நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு தரகட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 14 உலக தர நிர்ணய நாளாகும். எங்கும் தரம், எதிலும் தரம், எப்போதும் தரம் என்ற அடிப்படையில் இந்திய அளவில் பல்வேறு நுகர்வு பொருள்களுக்கு தர நிர்ணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தர முத்திரைகள், தர நியமனங்கள் இருந்தாலும் நுகர்வோருக்கு தரமான பொருட்களை தேர்வு செய்து வாங்குவதில் போதிய விழிப்புணர்வு இல்லை. ஊசி முதல் ஊர்தி வரை நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு தரகட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும். 1969-ம் ஆண்டு முதல் அக்டோபர் 14-ம் தேதியை உலக தர நிர்ணய நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

The post இன்று உலக தர நிர்ணய நாள் போலி ஐ.எஸ்.ஐ. முத்திரை பயன்பாட்டை தடுக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : World Quality Assignment Day ,NADU ,Dinakaraan ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...