×

செங்கல்பட்டில் நவராத்திரியையொட்டி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்: ரூ.300 முதல் ரூ.12,000 வரை விற்பனை

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நவராத்திரியொட்டியை கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. சிவனுக்கு மகா சிவராத்திரிபோல், ஆதிபராசக்திக்கு உகந்த ராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி. மன்மதனை எரித்த சாம்பலில் இருந்து தோன்றிய பண்டகாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கினான். அவனை அழிக்க தேவி 9 இரவுகளில் வெவ்வேறு உருவங்களை கொண்டு போரிட்டு 10வது நாள் அசுரனை வதம் செய்தாள்.

தேவி அசுரனை அழிக்க போராடிய இந்த 9 ராத்திரிகளே நவராத்திரி என்றும், அசுரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி என்றும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜயதசமி வர இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொம்மைகளுக்கு இறுதி வர்ணம் பூசும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தயார் செய்யப்பட்ட பொம்மைகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பொம்மைகள் அனைத்தும் களிமண் மற்றும் காகித கூழ் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது ரூ.300 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 3 இன்ச் முதல் 3 அடி வரை உள்ள பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post செங்கல்பட்டில் நவராத்திரியையொட்டி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்: ரூ.300 முதல் ரூ.12,000 வரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Navratri ,Chengalpattu ,Maha ,Shiva ,Adiparashakti ,Navaratri ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!