×

சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

கிருஷ்ணகிரி: ஜீனூரில் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேப்பனஹள்ளி வட்டாரத்தில், அட்மாதிட்டத்தின் கீழ், ஜீனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தொடங்கி வைத்து, சிறு தானிய சாகுபடி மற்றும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். இப்பயிற்சியின் போது, ஓய்வுபெற்ற துணை வேளாண்மை இயக்குநர் மனோகரன் பங்கேற்று, இயற்கை பூச்சி விரட்டி, பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

 

The post சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Jeenur ,Veppanahalli ,Admatitam ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் தாய்க்கு உதவியாக இருந்த சிறுமி பலாத்காரம்