×

செங்கல்பட்டில் குடும்ப அட்டை குறைதீர் முகாம்: கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், குடும்ப அட்டை குறைதீர் முகாம் நடைப்பெறும் என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும், 2வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இக்குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இன்று (14.10.2023) வட்ட அளவில் கீழ்க்கண்ட கிராமங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. அதன் விவரம். செங்கல்பட்டு வட்டம் ஒழலூர் கிராமம், செய்யூர் வட்டம் விளாங்காடு கிராமம், மதுராந்தகம் வட்டம் மெய்யூர் கிராமம் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

அதோபோல், திருக்கழுக்குன்றம் வட்டம் வீராபுரம் கிராமம், திருப்போரூர் வட்டம், சிறுங்குன்றம் கிராமம், வண்டலூர் வட்டம் காரணைப்புதுச்சேரி கிராமம் ஆகிய இடங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த குறைதீர் முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post செங்கல்பட்டில் குடும்ப அட்டை குறைதீர் முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Rahul Nath ,Chengalpattil ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...