×

ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்த 100 பேர் நிவாரணம் கோரி மனு

சென்னை: முதலீட்டு தொகையை பெற்று தரக்கோரி ஹிஜாவு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பி.டி.பிலாஷ் உள்ளிட்ட 100 பேர் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவில், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடி செய்துள்ளனர். எங்கள் முதலீட்டு பணத்தை மீட்டு தர வேண்டும் எனக்கோரி கடந்த மார்ச் 17ம் ேததி பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியிடம் புகார் கொடுத்தோம்.

ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்பு பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் பி.வேலுமணியன், வி.மலர்விழி ஆஜராகி மனுவை தாக்கல் செய்தனர். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

The post ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்த 100 பேர் நிவாரணம் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Hijavu ,CHENNAI ,PT ,Bilash ,Tiruvotiyur, Chennai ,Hijavu Financial Company ,
× RELATED 5 நாட்களிலேயே வெற்றி விழா கொண்டாடுறாங்க! - Bhagyaraj speech at PT Sir Success Meet | Dinakaran News.