×

டி.சி.எஸ்., எச்.சி.எல், இன்போசிஸ், விப்ரோ ஐ.டி நிறுவனங்களில் ஆள்குறைப்பு 32 ஆயிரம் பேர் வேலை இழப்பு: சம்பள உயர்வு, பதவி உயர்வும் கிடையாது

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களான டி.சி.எஸ், எச்.சி.எல், இன்போசிஸ் ஆகிய வற்றில் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 6 மாதத்தில் 25 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இது தவிர பல ஐ.டி நிறுவனங்கள் இந்த ஆண்டு சம்பள உயர்வு, பதவி உயர்வும் கிடையாது என்று அறிவித்துள்ளன. இந்தியாவில் பொறியியல் படிப்பு முடிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு, ஐடி நிறுவனங்களில் பணியில் சேர்வது. ஐ.டி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான இன்ஜினியர்களை ஒவ்வொரு ஆண்டும் பணியில் அமர்த்துகின்றன. இந்த நிலையில், செலவை குறைக்கும் விதமாக முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் திடீரென ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளால், கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 32 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் மொத்தம் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்துள்ளது. அதே நேரத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் அதிகபட்சமாக 14,500 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். எச்.சி.எல் நிறுவனத்தில் 4,500 வேலை பறிபோய் உள்ளது. இது தவிர விப்ரோ நிறுவனத்தில் 7 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். பணித்திறன் சரியில்லை என்று கூறி பலரை வேலையைவிட்டு இந்த நிறுவனங்கள் அனுப்பி உள்ளன. அத்தோடு, வேலையைவிட்டு தானாக விலகுபவர்களின் பணியிடங்கள் காலியாகவே விடப்பட்டுள்ளன. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இன்னும் 3 மாதத்துக்கு நீட்டிக்கும் என்று பல ஐ.டி நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் ஆக்சென்சர் ஐ.டி நிறுவனம் இந்த ஆண்டு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது.

* இந்தாண்டு கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது அடுத்த ஆண்டு மார்ச்சில் இன்ஜினியரிங் படிப்பை முடிப்பவர்களை வேலைக்கு எடுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ இந்த ஆண்டு நடத்தப்போவதில்லை என்று இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

The post டி.சி.எஸ்., எச்.சி.எல், இன்போசிஸ், விப்ரோ ஐ.டி நிறுவனங்களில் ஆள்குறைப்பு 32 ஆயிரம் பேர் வேலை இழப்பு: சம்பள உயர்வு, பதவி உயர்வும் கிடையாது appeared first on Dinakaran.

Tags : D. C. S. ,C. ,Infosys ,Vipro ,New Delhi ,India ,T. C. S ,H. C. ,H. C. L ,Infosys, ,Vipro I. ,Dinakaraan ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...