×

சில்லி பாயிண்ட்…….

 

* சேப்பாக்கத்தில் இருந்து…

போட்டியைக் காண 1750 பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர். இதற்கானஏற்பாடுகளை டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இனிசென்னையில் நடைபெற உள்ள உலக கோப்பை ஆட்டங்களைக் காண தலா 4000 மாணவர்களை அழைத்து வர டிஎன்சிஏதிட்டமிட்டுள்ளது.

* வந்திருந்த ரசிகர்கள் பலரும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்பெயர் மற்றும் எண் 22 பொறித்த சீருடை அணிந்துஇருந்தனர்.

* சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தைத் போலவே நேற்றும் ரசிகர்களைவெயில் கடுமையாக வாட்டி வதைத்தது

* காயம் காரணமாக முதல் 2 ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் கேன்வில்லியம்சன், வேகப் பந்துவீச்சாளர் லோக்கி பெர்குசன் ஆகியோர் நேற்று களமிறங்கினர்.

* உலக கோப்பை தொடர்களில் இணைந்து விளையாடி அதிக ரன் குவித்த வீர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த சேவக்-சச்சின் இணை (971) சாதனையை முஷ்பிகுர் ரகிம் – ஷாகிப் அல் ஹசன் ஜோடி (972) நேற்று முறியடித்தது. ஆஸி.யின் கில்கிறிஸ்ட் – ஹேடன் இணை (1220) முதல் இடத்தில் நீடிக்கிறது.

* குறைந்த இன்னிங்ஸில் 200 விக்கெட் (ஓடிஐ) சாதனை பட்டியலில் போல்ட்(107 இன்னிங்ஸ்) 3வது இடம் பிடித்தார். ஸ்டார்க் (102), சக்லைன் முஷ்டாக் (104) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

The post சில்லி பாயிண்ட்……. appeared first on Dinakaran.

Tags : Chepauk… ,TNCA ,President ,Ashok Chikamani ,Dinakaran ,
× RELATED சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும்...