×

அதிகாரிகள் இடமாற்றம் நிர்வாக நடவடிக்கை: சிஏஜி அறிக்கை

புதுடெல்லி: மோடி தலைமையிலான 9 ஆண்டுகால பாஜ ஆட்சியில் 7 திட்டங்களில் பலகோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ஒன்றிய கணக்கு தணிக்கைத்துறை அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதுவா சின்ஹா, தத்தபிரசாத் சூர்யகாந்த் சிர்ஷாத் மற்றும் அசோக் சின்ஹா ஆகியோர் கடந்த 11ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் அவர்களின் பணியிட மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து ஒன்றிய கணக்கு தணிக்கை துறை வௌியிட்டுள்ள அறிக்கையில், “ அதிகாரிகள் இடமாற்றம் என்பது நிர்வாக ரீதியான விவகாரம். இதில் அரசியல் ரீதியான உள்நோக்கம் கற்பிப்பது தவறு” என்று தெரிவித்துள்ளது.

The post அதிகாரிகள் இடமாற்றம் நிர்வாக நடவடிக்கை: சிஏஜி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : CAG ,New Delhi ,Modi ,BJP ,Union ,Dinakaran ,
× RELATED உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று...