×

1 கோடி பனை விதைகளை விதைத்த சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா: எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ஒரு கோடி பனை விதைகளை தமிழக கடற்கரை ஓரங்களில் விதைத்த சாதனையாளர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்த இந்த பாராட்டு விழாவில், கல்லூரி கல்வித் துறை இயக்குநர் கீதா, விஜிபி நிறுவன தலைவர் சந்தோசம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

அமைச்சர் சி.வி.கணேசன் சிறப்புரை வழங்கி அனைவருக்கும் சான்றிதழ், கேடயம் வழங்கினார். பனை வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசுகையில், ‘‘ஒரு கோடி பனை விதை சேகரிக்கவும், நடுவதற்கும் முக்கிய பங்காற்றிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி கல்வியின் இயக்குனர் இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளார்’’ என்றார்.

The post 1 கோடி பனை விதைகளை விதைத்த சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா: எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Ernavur Narayanan ,Chennai ,Palm Tree Workers' Welfare Board ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...