×

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன்முறையாக கிரிக்கெட் சேர்ப்பு.. ரசிகர்கள் உற்சாகம்..!!

மும்பை: சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன்முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டியை சேர்த்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிரிக்கெட், பேஸ்பால், ப்ளாக் கால்பந்து, ஸ்குவாஷ் லாக்ரோஸ் என 5 புதிய விளையாட்டுகள் 2028 ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்படுகின்றன. மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸில் ரஷ்ய அணி பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய கொடி இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1900ம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது முதன் முதலாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 123 ஆண்டுகளின் பின்னர் தற்போது மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன்முறையாக கிரிக்கெட் சேர்ப்பு.. ரசிகர்கள் உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Olympics ,MUMBAI ,Los Angeles, USA ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...