×

வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வன அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் மேல்முறையீடு..!!

டெல்லி: வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வன அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். வாச்சாத்தி மலை கிராம மக்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தர்மபுரி மாவட்டம் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உறுதி செய்தது. நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு சிறை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் வாச்சாத்தி கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். இதனிடையே, முதன்மையான குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட வனப்பணி அதிகாரி நாதன் தனது தண்டனையை எதிர்த்து ஏற்கனவே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நாதனின் மேல்முறையீட்டு மனு திங்கட்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி கே.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், தற்போது வனத்துறை அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் தங்கள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

The post வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வன அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் மேல்முறையீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Delhi ,Wachathi ,Vachathi ,
× RELATED டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி விளக்கம்...