×

கூடலூர் சுற்றுவட்டாரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 2 யானைகள்: கட்டை கொம்பன் யானை டிரோன் கேமரா உதவியுடன் கண்டுபிடிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கட்டை கொம்பன் காட்டுயானையை டிரோன் கேமரா உதவியுடன் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கட்டை கொம்பன், ராக்கெட் என 2 காட்டுயானைகள் கிராமமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இவற்றை விரட்டுவதற்காக முதுமலையில் பயிற்சி பெற்ற வசிம், விஜய், சீனிவாசன், பொம்மன் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் வனத்துறை இறங்கியுள்ளது. இதில் இரவு பாலம் பகுதியில் உள்ள புதரில் கட்டை கொம்பன் யானை நடமாடுவது ட்ரோன் கேமரா மூலமாக தெரியவந்துள்ளது. மேலும் ராக்கெட் யானையை கண்டறியும் பணிகளையும் சிறப்பு குழுக்கள் அமைத்து வனத்துறை இரவு பகலாக கண்காணித்து வருகிறது.

The post கூடலூர் சுற்றுவட்டாரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 2 யானைகள்: கட்டை கொம்பன் யானை டிரோன் கேமரா உதவியுடன் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kata Komban ,Nilgiris ,Kata ,Komban ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை