×

வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய நெல் சாகுபடியில் அதிக மகசூல் திறனிற்கான ஆய்வு

சத்தியமங்கலம் : பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அதிக மகசூல் தரவல்ல நெல் வளர்ப்புகளான சி.பி. (மாஸ்) 14142 மற்றும் வீரிய ஒட்டு நெல் டி.என்.டி.ஆர்.எச் 55 கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் செயல் விளக்கத் திடலை ஈரோடு மாவட்ட வேளாண் விரிவாக்கத் துறை அலுவலர்களுக்கு விளக்கிடும் வகையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ)வெங்கடேஷ், துணை இயக்குநர்கள்(மாநிலத் திட்டம்)தமிழ்ச்செல்வி, நுண்ணுயிர் பாசனம் பாமாமணி,வணிகம் மற்றும் விற்பனை மகாதேவன்,விதை ஆய்வு சுமதி, அனைத்து வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் விரிவாக்கத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் (நெல் துறை) மனோன்மணி பங்கேற்று இவ்வளர்ப்புகளின் மகசூல் திறன் மற்றும் சிறப்பியல்புகளை விரிவாக எடுத்துரைத்தார். நெல் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் முனைவர் புஷ்பம்,முனைவர் சுரேஷ் மற்றும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்,முனைவர் சக்திவேல்,பேராசிரியர் முனைவர் ரேணுகாதேவி, இணைப் பேராசிரியர்களான முனைவர் சுந்தரவதனா,முனைவர் இரமா மற்றும் முனைவர்வாகேஸ்வரன் ஆகியோர் பங்குபெற்றனர்.

வேளாண் விரிவாக்கத் துறை அலுவலர்கள் டி.என்.டி.ஆர்.எச் 55 மற்றும் சி.பி. (மாஸ்) 14142 நெல் வளர்ப்புகளின் மகசூல் தன்மையைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இணைப் பேராசிரியர் முனைவர் அமுதா செய்திருந்தார்.

The post வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய நெல் சாகுபடியில் அதிக மகசூல் திறனிற்கான ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Agricultural Research ,Sathyamangalam ,Bhavanisagar ,Agricultural Research Station ,
× RELATED வாழை மர தண்டில் இருந்து கூடை செய்தல் குறித்து செயல் விளக்கம்