×

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக 354 சதவீதம் சொத்துகளை குவித்ததாக ராமேஸ்வர முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012 – 2016 காலகட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் பொறுப்புகளில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. ராமேஸ்வர முருகன் மனைவி அகிலா, தந்தை பழனிசாமி, தாய் மங்கையர்கரசி, மாமனார் அறிவுடைநம்பி, மாமியார் ஆனந்தி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வர முருகனிடம் ஏப்ரல் 2012-ல் ரூ.1,98,10,000 மதிப்பிலான சொத்துகள் இருந்தது. மார்ச் 2016-ல் சொத்து மதிப்பு 6 கோடியே 52 லட்சத்துக்கு 52 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

The post தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Teacher Examination Board ,Rameswara Murugan ,Anti-Corruption Department ,Chennai ,Dinakaran ,
× RELATED மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை..!!