×

கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை வைத்திருப்பவர் எம்.பி.சுரேஷ். இவர் கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்கங்களின் நகர தலைவராகவும் இருந்து வருகிறார். வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, வெங்கடேஸ்வரா வணிகவளாகம் என பிரபலமான இவர் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்திருக்கிறார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர் அந்த தொழிலில் முதலீடுகள் பெருமளவில் லாக் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் இன்று காலை கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற கிருஷ்ணகிரி போலீசார் அவரது வீட்டிலிருந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனமே கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போல் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியப்படுகிறது. அவரது இளையமகள் குடும்ப பிரச்சனைக்காரணமாக தனது வீட்டுக்கு வந்ததாகவும் இதுபோல பல்வேறு மனஅழுத்தத்திலிருந்த அவர் தற்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொள்ளவேண்டும் எண்ணத்தில் இருந்ததாகவே போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : MP Suresh ,Krishnagiri ,Suresh ,Dinakaran ,
× RELATED 959 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்