×

தொடரும் போர் பதற்றம்!: காஸா எல்லைக்குள் புகுந்து அதிரடி.. இஸ்ரேலிய பிணைய கைதிகள் 250 பேர் உயிருடன் மீட்பு..!!

காஸா: காஸா எல்லை அருகே உள்ள முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் 250 பேர் மீட்கப்பட்டனர். காஸா பகுதி மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வரும் இஸ்ரேல், காஸாவிற்குள் அடிப்படை தேவைகளான உணவு, மருந்து உள்ளிட்டவைகளை எடுத்து செல்வதையும் தடுத்துள்ளது. மின்சாரத்திற்கு தேவையான எரிபொருளையும் உள்ளே அனுமதிக்காததால் காஸா பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

அங்கு பிணைய கைதிகளாக உள்ள 150க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படும் வரை காஸாவில் ஒரு மின்சார விளக்கும் எரியாது, ஒரு குழாயிலும் தண்ணீர் வராது, ஒரு எரிபொருள் வாகனம் கூட உள்ளே நுழைய முடியாது, தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது. இந்நிலையில், காஸா எல்லை அருகே உள்ள முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் 250 பேர் மீட்கப்பட்டனர்.

இஸ்ரேல் கமாண்டோ படைகள் தாக்குதல் நடத்தி பிணைய கைதிகள் 250 பேரை உயிருடன் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் ஹமாஸ் குழுவை சேர்ந்த 25 பேரை இஸ்ரேலிய படைகள் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய பிணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையின்போது ஹமாஸ் குழுவை சேர்ந்த 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, இஸ்ரேலில் இருந்து 21 தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த முதல் சிறப்பு விமானத்தில் 21 தமிழர்களும் வந்துள்ளனர்.

The post தொடரும் போர் பதற்றம்!: காஸா எல்லைக்குள் புகுந்து அதிரடி.. இஸ்ரேலிய பிணைய கைதிகள் 250 பேர் உயிருடன் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Gaza border ,Gaza ,Israelis ,
× RELATED காசாவின் தெற்கு பகுதியான ரஃபா மீது...