×

முறைகேடு புகாரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைது..!!

சென்னை: முறைகேடு புகாரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் ஆராவமுது உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒசூரில் வீட்டு வசதி வாரிய ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆராவமுதுக்கு உடந்தையாக இருந்த மதியழகன், சதீஷ், டேனில், ஸ்ரீதர், முருகதாஸ், ஆனந்த் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைதான 7 பேரிடம் இருந்து 13 செல்போன்கள், 62 ஏ.டி.எம். கார்டுகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post முறைகேடு புகாரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Housing Board ,Assistant Revenue Officer ,Chennai ,Aravamuth ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...